Top News

இனவாத செய்தி வெளியிட்ட தினக்குரலுக்கு காத்தான்குடியிலும் தடை!

Image result for தினக்குரல் பத்திரிகை 29.04.2018

காத்தான்குடியில் உள்ள வாசிகசாலைகளில் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது என நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபயா அணிவதற்கு அப்பாடசாலை அதிபரினால் தடை விதிக்கப்பட்ட செய்தி தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதிராக தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை இனவாத செய்தியை வெளியிட்டு இருந்தது.
இதற்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதான வாசிகசாலை உட்பட 5 உப வாசிகசாலைகளில் தினக்குரல் பத்திரிகையை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்கப்பட்டது என நகர முதல்வர் அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

அப்துல் கையூம்

Post a Comment

Previous Post Next Post