திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை மூதூர் தொகுதிகளில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் கடந்த புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடதொகுதியில் இடம்பெற்றது.
கட்சி செயற்பாடுகளை கிராம மட்டங்களில் அதிகரித்து கட்சியை கிராமப்புறங்களில் கொண்டுசென்று எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய கட்சியை வெற்றிபெறச் செய்வது பற்றி இதன்போது பிரதமர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
கிராமிய மட்டங்களில் உள்ள ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்த பிரதமர் சமுர்த்திஇ வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து பிரட்சினைகளுக்கும் விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் எதிர்வரும் நாட்களில் ஐக்கியதேசிய கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இளைஞர் விவகாரம் இதெற்கு அபிவிருத்தி அமைச்சரும் அலரிமாளிகை ஊழியர்களின் பிரதானியுமான சாகல ரத்நாயகவும் கலந்துகொண்டனர்.
Post a Comment