நல்லாட்சிக்கு எஞ்சியுள்ள காலம் சோதனைக்காலமாகவே இருக்கும்- மக்களின் மனங்கள் வெற்றிக்கொள்ளப்படுமா? என ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல்களின் பின்னர் இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தில் பல்வேறு குழப்பநிலைகள் ஏற்பட்டன.
இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 16பேர் விலகிச்சென்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில் சர்வதேச தலையீட்டுடன் மீண்டும் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆட்சிக்கு எஞ்சியுள்ள ஒரு வருடம் மற்றும் ஏழ மாதக்காலங்கள் சோதனையான காலமாகவே இருக்கப்போகிறது.
இந்தக்காலத்துக்குள் ரணில்- மைத்திரி அரசாங்கம் பொதுமக்கள் மனங்களை வெற்றி கொள்ளவேண்டும். அத்துடன் 2015ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதிலும் இராணுவத்தினரின் விடயத்தில் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை வெற்றி கொள்வதில் நிச்சயமாக அரசாங்கத்துக்கு பாரிய சவால் ஒன்று காத்திருக்கிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
Post a Comment