றயிஸ் முஹம்மட்
பாடசாலைகளில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் அரசியலும் குரோதமும் மிதமிஞசி காணப்படுவதாக அட்டாளைச்சேனை மத்திய கல்லுாரி அதிபர் கமறுத்தீன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஒரு இணையத்தில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார், மேலும் கருத்துக்கூறிய அவர்
முஸ்லிம் பாடசாலைகளில் குறுநில அரசியல்வாதிகளின் தாக்கம் அதிகமுள்ளது, இதனால் பாடசாலை ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஊடகங்களும் ஊடகசியலாளர்களும் விளங்கிகொள்ள வேண்டும். நாங்கள் மாடு மேய்க்கவில்லை பாடசாலை நடாத்துகிறோம், இங்கிருந்து தான் மனிதர்கள் உருவாகின்றனர். இந்தப்பயணம் மிகப்புனிதமானது இதற்கு பக்கபலமாக இருப்பதை விட்டுவிட்டு குள்ளர்கள் போல செயற்படுவது நல்லதல்ல.
என் அதிகாரத்தை பயன்படுத்தி சான் செவ்வனே பாடசாலைக்கும், சமூகத்திற்கும் சேவை செய்து வருகிறேன், இதில் ஹக்கு இறைவனுக்கு தெரியும்., பிரச்சினை இருப்பின் என்னுடன் பேசமுடியும். அதற்கு மேலுள்ள அதிகாரிகளை சீண்டுவதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. என்றார்.
Post a Comment