காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 37 கொல்லப்பட்டதாகவும் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 1,200 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 110 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment