ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தான் எந்த நேரத்திலும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக தயாராக இருப்பதாக கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
எனினும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் இதுவரை எவரும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் பதவி விலகுவது தொடர்பான யோசனைகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மஹிந்த அமரவீரவுக்கு வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விரும்பும், கட்சியை விட்டுப் போகாத, ஐ.தே.கட்சி, கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கட்சியின் தலைவர் எடுக்கும் எந்த தீர்மானத்திற்கும் தான் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எந்த நேரத்திலும் கட்சியை விட்டு செல்ல போவதில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment