Top News

“ஆரோக்கியமான வாழ்க்கையே சிறந்த கல்வியின் சக்தியாகும்”








*க/ அக்குறனை அஸ்ஹர் மத்திய கல்லூரி( தேசிய பாடசாலை)இல் 11.05.2018 நேற்று பாடசாலை சுற்றாடல் குழுவினரால் பாடசாலை மேற்கொள்ளப்பட்ட தோட்டத்தில் அருவடை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.*

இதில் கல்லூரி அதிபர் A.L Anwer அவர்களும் பிரதி அதிபர் M.S.F Farzana அவர்களும் மற்றும் பகுதி தலைவர்களான M.M Faizal, A.L.M Noufy மற்றும் MRS Naleer, A.S Ramziya அவர்களும் பேன்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்ட பொறுப்பாசிரியர் A.W.F Sharmila மற்றும் நிகழ்ச்சித்திட்ட தலைவர்களான M.T.A.S.M Mahir, M.S.F Haroosa, B. Hazana Farwin மற்றும் சுற்றாடல் குழு அங்கத்தவர்கள் M.R.F Rizwana கலந்து சிறப்பித்தார்கள். இதில் தரம் 9 மாணவர்களின் முயற்சியின் பயனாக சிறிய தோட்டம் உருவாக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

இன்று இதில் சிறிய அருவடை ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் அதிபர் இதனை வரவேற்பாதகவும் இதுபோன்ற தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனை மாணவர்களுக்கு ஏத்திவைத்தார். அத்துடன் சக ஆசிரியர்களும் அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள். 

பாடசாலையின் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான முயற்சிகளே நாளைய சமுதாயத்திற்கு ஆரோக்கியமான பிரஜைகள் உருவாக்க காரணமாக அமைகிறது..

“ஆரோக்கியமான வாழ்க்கையே சிறந்த கல்வியின் சக்தியாகும்”

தகவல்
பொறுப்பாசிரியர்  
Mrs A.W.F Sharmila(NDT Food technology, BA)

Post a Comment

Previous Post Next Post