காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியின் பேரணிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சர்வதேச உழைப்பாளர் தினத்தினை இலங்கை அரசாங்கம் தள்ளிப் போட்டது. முதலாம் திகதியை 7ம் திகதியாக்கியது. இதனால் கூட்டு எதிரணி 7ம் திகதி பேரணியை நடத்த தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில் காலி முகத்திடலில் பேரணியை நடத்த கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்தது. எனினும் அரசாங்கம் மறுப்பு தெரிவித்தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிந்திருந்தன.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்ட போது, காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியின் பேரணிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment