மியான்மரில் ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு இராண்டாம் கட்டமாக இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 6 லட்சம் பேர் பக்கத்து நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அகதிகள் முகாமில் இடநெருக்கடியிலும், உணவு பஞ்சத்திலும் அவதியுறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு இந்தியா இரண்டாம் கட்டமாக அனுப்பிய நிவாரண பொருட்கள் நேற்று வங்கதேசம் சென்று சேர்ந்தது.
விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஐராவத் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை இந்திய தூதரக அதிகாரி ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா, வங்கதேசம் சிட்டகோரம் துறைமுகத்தில் அந்நாட்டு பேரழிவு மேலான்மை மற்றும் நிவாரணத் துறை அமைச்சர் மொஃபாசலிடம் உசேன் சவுத்ரி மாயாவிடம் நேற்று ஒப்படைத்தார்.
இந்தியா அனுப்பிய 373 டன் எடையுடைய நிவாரண பொருட்களில் 104 டன் பால் பவுடர், 102 டன் கருவாடு, குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் 61 டன், 50 ஆயிரம் ரெய்ன்கோட் மற்றும் 50 ஆயிரம் ஜோடி காலனிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக 10 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய், 20 ஆயிரம் சமையல் அடுப்புகள் விரைவில் வங்கதேசத்திற்கு சென்று சேர உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்கட்டமாக சுமார் 3 லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு “ஆபரேசன் இன்சானியாட்” என்ற பெயரில் இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment