அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் நான்கு முறை அமைச்சரவையை மறுசீரமைப்புச் செய்ததன் ஊடாக தனது இயலாமையை வெளிக்காட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவையை 30 ஆக குறைப்பதாகவும், விஞ்ஞான ரீதியில் அமைச்சரவை மாற்றியமைப்பதாகவும் வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தத்தை உடைத்தது. எந்தவித விஞ்ஞானத் தன்மையும் இல்லாது சகல அமைச்சுக்களையும் பிரதி அமைச்சு என்றும், இராஜாங்க அமைச்சு என்றும் பல்கிப் பெறுக்கச் செய்தது.
அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவையும் கேலிக் கூத்தாகவே உள்ளது. எந்தவித முறைமையும் இல்லாது அமைச்சர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment