Top News

கோட்டாபயவை ஏன் கைது செய்யப்படவில்லை? -ராஜித்த விளக்கம்!

Image result for ராஜித சேனாரத்ன

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யமுடியாமைக்கான காரணம் தனக்கும் தெரியவில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்ய ஏன் அரசாங்கத்திற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கடந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்களை கைது செய்யவும் சிறிய காலம் தேவைப்பட்டது.

இதற்கமைய, ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சாலிய விக்ரமசூரிய ஆகியோர் சில மாதங்கள் கடந்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கேள்வி எழுப்புவதற்கு தோன்றவில்லையா என கோபத்துடன் கேட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரையும் கைது செய்யப முடியவில்லை அது தொடர்பில் மறந்து விடீர்களா எனவும் வினவினார்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் கைது செய்யமுடியவில்லை? அதற்கான காரணம் என்ன? எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உங்களின் கேள்விக்கு நன்றி எனக்கூறிய ராஜித்த, இப்பொழுதாவது வினவினீர்களே... என புன்னகைத்தார்.

எனினும் தொடர்ந்து குறித்த கேள்விக்கான பதிலினை அளிக்குமாறு செய்தியாளர்கள் கோரினர்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் கைது செய்யமுடியவில்லை என தனக்கும் தெரியவில்லை என்றார்.

டி.ஏ.ராஜபக்ஷ நினைவகம் அமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பொது சொத்துகள் சட்ட மூலத்தின் கீழ் தம்மை கைது செய்ய முயச்சிக்கப்படுவதாக தெரிவித்து, குறித்த விசாரணைகளை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என அமைச்சரவை இணை பேச்சாளர் , அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post