Top News

மூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் எய்ட் இன் ஏற்பாட்டில் ‘போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கருத்தமர்வு மூதூர் ஷாபி நகர்சுகாதார நிலையத்தில் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தமர்வில் வெறுகல் ஈச்சழப்பத்து ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.ஹாரிஸ் பிரதானவளவாளராக கலந்து கொண்டு கருத்துரை  வழங்கினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பொதுவாக பெண்கள், சிறார்களுக்கும் போசாக்குணவின் முக்கியத்துவம், போசாக்குணவுகள் என்றால் என்ன?

 தற்போதுள்ள உணவுக் கலாசாரத்தின் சீர்கேடுகள், விவசாயக் கிராமம் என்ற வகையில் நமது உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்வதைநோக்கி இக் கிராம மக்கள் பயணித்தல், வீட்டுக்கு வீடு ஆரோக்கிய உணவுகளை உற்பத்தி செய்வதன் மூலமாக நமது ஆரோக்கியத்தையும் நமதுஎதிர்கால சிறார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்கு, ஆரோக்கியமான குழந்தைகளைப்பிரசவிப்பதில் தாய்மார்கள் உடல் மற்றும் மனநிலையில் ஆற்றும் பங்கு போன்ற விடயங்களை வைத்தியரினால் மிகவும் தெளிவான முறையில்மக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டன.

60 இற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களும், ஆர்வமுள்ள தாய்மார்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டதோடு,  நிகழ்வின் இறுதியில்கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45 போஷாக்குணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post