இலங்கையில் முஸ்லிம்களுக்கான தனியான தொலைக்காட்சி இல்லாத போது நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது கியு ரி.வி (QTV) , அதாவது கிம்மா ரி.வி, ஆனால் தற்பொழுது அது எங்கள் நிறுவனத்தின் வசம் இல்லை என கவலையுடன் குறிப்பி்டுள்ளார் மௌலவியும் சமூக சேவையாளருமான ஹாறுான் அவர்கள்,
சிலோன் முஸ்லிம் நிறுவனத்தினை அதிகாரபூர்வமாக வாங்கவுள்ள கிம்மா அமைப்பின் தலைவர் அளித்த சிறப்பு பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்,
இலங்கையில் முஸ்லிம்களுக்கான தனியொரு ஊடகம் உருவாகவேண்டும் அதற்கான முதற்கட்ட படிகளை சிலோன் முஸ்லிம் செய்து கொண்டு வருகிறது அதனை நாங்கள் வாங்குவதில் பெருமிதம் என்றார்,
கியு ரி.வியும் அப்படித்தான் இயங்கியது ஊடகம் மாத்திரமின்றி பல சமூக சேவைகளை நாங்கள் செய்தோம். ஆனால் பணிபுரிந்த இருவரின் கீழ்த்தரமான நடவடிக்கையினால் அது வியாபாரத்திற்கு பயன்படும் பொருளாக மாறிவிட்டது, கியு ரி.வி தற்பொழுது எங்கள் கிம்மா வசம் இல்லை, இதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்தோம். இப்படி நம்பிக்கை துரோகம் செய்வார்கள் துளியளவும் நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.
என்றாலும் நோக்கங்களை இறைவன் அறிவான் அந்த அடிப்படையில் எங்களிடம் சிலோன் முஸ்லிம் கிடைத்துள்ளது.
24மணி நேர இஸ்லாமிய வானொலி, டிஜிடல் நேரலை, தஹ்வா போடல் என பல பரிணாமங்களில் சிலோன் முஸ்லிமை செயல்படுத்தவுள்ளோம். இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலோன் முஸ்லிம், ஐக்கிய நாடுகள் ஊடகப்பிரிவு, சர்வதேச டிஜிடல் ஊடக வலயமைப்பு போன்றவற்றில் அங்கத்துவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. என்றார்.
Post a Comment