ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
தென்கிழக்குப் பல்கலைக் கழகலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நாளை (28) நடைபெறவுள்ளன.
நடாளுமன்ற ‘கோப்’ குழு வின் விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உயர் கல்வியமைச்சு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதனடிப்படையில் நாளை (28) திங்கட்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அதிகாரி ஒருவர் இது தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களைப் பெறவுள்ளார். இது தொடர்பான அழைப்புக் கடிதங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியை கல்வியமைச்சின் உயரதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த முயற்சித்தேன். இருப்பினும் இன்று (27) விடுமுறை தினம் என்பதால் பகல் முழுவதும் நான் மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில் இன்றிரவு கல்வியமைச்சின் ஓர் உயர் அதிகாரியின் கைத்தொலைபேசி இலக்கம் ஒன்றை நண்பர் ஒருவர் ஊடாகப் பெற்று அந்த அதிகாரியைத் தொடர்பு கொண்டு இது குறித்து நான் கேட்ட போது, அவர் இவ்வாறு,தெரிவித்தார்
……’ ஆம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
இதன் அடிப்படையில் தனி நபர் கொண்ட விசாரணையாளர் ஒருவரை நாங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழத்துக்கு அனுப்புகிறோம். இது தொடர்பில் அவர் பலரிடம் வாக்குமூலங்களைப் பெறுவதுடன் விசாரணைகளையும் முன்னெடுப்பார். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும்…’ என்றார்.
Post a Comment