சாய்ந்தமருதில் கடந்த வியாழக்கிழமை (31) சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து CJP தெற்காசிய வலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் சில தனிப்பட்ட நபர்களால் ஆங்காங்கே ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவமானது ஊடகத் துறையினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இவைகள் தொடருமாயின் சமாதான சூழ்நிலை நிலைமாற்று பொறிமுறையாகிவிடும்
சுதந்திர ஊடகவியலாளர் யூ.கே. காலிதீன் (இலங்கை) தாக்குதல் விசாரணை துரிதப்படுத்த படவேண்டும் எனவும் குறித்த அமைப்பு கேட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment