கடந்த அரசாங்கத்தில் தன்னை ஓர் இனவாதியாக அடையாளப்படுத்தி மிகுந்த பிரபலம் அடைந்த ஞானசாரவுக்கு தற்பொழுது சிறைவாசம் கிடைத்துள்ளது, இந்த செய்தி கேட்டு பல முஸ்லிம்கள் சந்தோசத்தை பகிர்ந்துள்ளனர் இது கண்டிக்க தக்கது என மனித உரிமைகளை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பின் தேசிய செயலாளர் ஆசுக் றிம்ஜான் தெரிவதித்துள்ளாளர்.
ஞானசார தேரர் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார், மேலும் அந்த அறிக்கையில்,
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி, இலங்கை முஸ்லிம்கள் குறித்த சரியான தெளிவினை வழங்க வேண்டும், அவர் முஸ்லிம்கள் குறித்து வேறு வகையில் சிந்தனை கொண்டுள்ளார் என்பது கடந்த காலங்களில் புலப்படுகிறது என்றார்.
இலங்கை முஸ்லிம்கள் ஞானசாரவை இழிவாக பேசுவதை விட்டு விட்டு ஒற்றுமைப்பட வேண்டும், இயக்கங்களாக அரசியல் கட்சிகளாக இன்று பல பிரிவுகளில் முஸ்லிம்கள் சின்னா பின்னமாகியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
Post a Comment