கிழக்கு மாகாணத்தின் சபை கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளை, தேர்தல் நடந்தால் எப்படியான கூட்டு இணையும் என ஊகங்களும் கிளம்பியுள்ளது. அந்த வகையில் ஏலவே இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பார்க்கையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முதலமைச்சை விரும்புவதற்குரிய வாயப்பில்லை அதற்கு பல காரணங்கள் உள்ளது. அப்படி கேட்டாலும் அது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருக்கும். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரங்களை ஊர்களுக்கு பகிரும் அடிப்படையில் இம்முறை மு.காவின் முதலமைச்சு அம்பாறைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறையில் தலைருக்கும் கட்சிக்கும் விசுவாசமான ஒருவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் காணப்படுகிறார். அது மாத்திரமின்றி அக்கரைப்பற்றிற்கு அமைச்சர் ஹக்கீம் இதுவரை ஒன்றையும் பெரிதாக செய்துவிடவில்லை. அதற்கு பகரமாக இது அமையும். அதைவிடுத்து தவம் ஒரு ஆளுமை மிக்கவராகவும் எதிர்த்து நின்று அரசியல் செய்யக் கூடிய வல்லமையும் உள்ளவர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதிகாரத்தில் இருந்தபோதே அவரை எதிர்த்து அரசியல் செய்து வென்றவர். இந்த காரணங்கள் தவத்தை முதல்வராக்க போதுமானதாக இருக்கும்.
இ;ப்படி நடப்பின் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.
நன்றி புதிய குரல் சஞ்சிகை
Post a Comment