உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் சித்தியடைவதாக பாராளுமன்றத்தில் உரையாற்றியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்றவகையில் அது தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் பேசவிரும்புகின்றேன்.
உயர் கல்வி அமைச்சர் பல்கலைக்கழக மாணவிகளையும் விரிவுரையாளர்களையும் சம்பந்தப்படுத்தி பேசியிருந்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் சித்தியடைவதாக நாட்டின் தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் அப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்தார்கள்.
இலங்கையில் அதிகளவிலான பல்கலைக்கழகங்கள் இருக்கும் நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் மட்டும் பேசுவது பொருத்தமற்றது என நினைக்கின்றேன். உங்களது அமைச்சின் கீழுள்ள நிறுவனம் தொடர்பில் விமர்சிப்பது ஒழுக்க விழுமியங்களுக்கு புறம்பானதாகும். அப்பிரதேசத்திலிருந்து குழுவொன்று வருகைதந்து பிழையான தகவல்களை அமைச்சருக்கு தந்தார்கள் என நான் அறிந்தேன்.
உண்மையில் அப்பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற மாணவர்கள் விஷேடமாக மாணவிகள் மிகுந்த கவலையடைந்துள்ளார்கள். எனவே அப்பல்கலைக் கழகத்தின் புகழையும் கீர்த்தியையும் உயர்வடையச் செய்வதற்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முயற்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
Post a Comment