அமைச்சர் விஜயாதாச கூறிய கருத்துக்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சுயநல அரசியல்வாதிகள் உங்கள் பிள்ளைகள், சகோதரிகள் பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி பதிவிடுவீர்களா என மனித உரிமைகளை காப்பதற்கான இலங்கை முஸ்லிம் அமைப்பு கேட்டுள்ளது, குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் நாம் பகிரும் அல்லது கண்டிக்கும் விடயங்கள் எமது சமூகத்தின் விம்பத்தை பிழையாக சித்தரித்துக் காட்டும், அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் குறிவைத்து தாக்கப்படுகிறது, உளவியல் ரீதியிலான தாக்கங்களே இதில் அதிகம், முஸ்லிம்களை பிழையானவர்கள் என சித்தரிக்க ஒரு குழு முயல்கிறது இதற்கு வித்திடும் வகையில் நமது செயற்பாடுகள் இருந்துவிடக்கூடாது.
குறித்த பல்கலை விரிவுரையாளர் இப்படியான ஒரு தவறை செய்யாமல் இருந்திருந்தால் பாராளுமன்றம் வரை இந்த விடயம் சென்றிருக்காது, பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான் என்ற அடிப்படையில் இந்த சம்பவம் வெளிப்பட்டுள்ளது, குறித்த விரிவுிரையாளரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் எமது அமைப்பிற்கும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர், இந்த விடயம் இவ்வளவு பூதாகரமாக மாறும் என்று யாரும் எதிர்பார்திருக்கவில்லை, இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் மற்றவரை குறை சொல்லாமல் மற்றைய சமூகத்திற்கு எடுததுக்காட்டாக திகழவேண்டும். இதுதான் இஸ்லாமிய வழி முறையும் கூட, அப்படி வாழ்வதையே இஸ்லாமும் சொல்லியிருக்கிறது.
முஹம்மட் றிஸ்வி,
மனித உரிமை செயற்பாட்டாளர்
மனித உரிமைகளை காப்பதற்கான இலங்கை முஸ்லிம் அமைப்பு
Post a Comment