கொழும்பு பெரியவள்ளிவாசலில் 2 ஆவது தடவையாகவும் கூடிய பிறைக்குழு, வெள்ளிக்கிழமை இன்று (15) நோன்பு பிடிக்குமாறு அறிவித்துள்ளது.
நேற்கு வியாழக்கிழமை மாலை நேரத்தில் பிறையை கண்ட பலகத்துறை, மன்னார், திஹாரி, அக்கறைப்பற்று மக்கள் இந்த அறிவிப்பை அடுத்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் மிகுந்த கண்டனத்துக்குரியது என மனித உரிமைகளை காப்பதற்கான இலங்கை முஸ்லிம் அமைப்பு என தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாட்சியங்களுடன் சொல்லப்பட்ட தகவல்களை பிறைக்குழு (அகில இலங்கை ஜம்மியதல் உலமா) ஏற்க மறுத்தமைக்கு எதிராக நீதி மன்றத்தை நாடவுள்ளதாக அமைப்பின் தேசிய செயலாளர் ஆசுக் றிம்ஜான் தெரிவித்துள்ளார்.

Post a Comment