Top News

கிழக்கு முஸ்லிம்களோடு இனி சேர்வதாக இல்லை


கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் இணைய வேண்டிய நிலை ஏற்படும் என்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி 15ஆம் கிராமம் மத்திய விளையாட்டு கழகத்தின் 09ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி அன்னமலை 02 பாமடி பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதகமான பின்விளைவுகள் ஏற்படும்.

முஸ்லிம்கள் எங்களுடன் இணைந்தால் வடகிழக்கு இணையும் என்று கூட்டமைப்பின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் கிழக்கு வடக்கில் இருந்து தனியாக பிரிந்து நிற்கவேண்டும் என்ற வலுவான கருத்து பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தேயும், சிறுபான்மை முஸ்லிம் அரசியல் வாதிகளிடத்தேயும் காணப்படுகின்றது.

இவ்வாரான நிலமை கிழக்கு மாகாணத்தில் தோற்றுவிக்கப்படுமானால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்கள் பெரும்பான்மை சமூகத்துடன் இணைய வேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை, இவ்வாறு ஏற்படும்போது கிழக்கு மாகாண முஸ்லிங்களுக்கு பாதகமான பின்விளைவுகள் ஏற்படும் எனவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளருமான தவராசா கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post