Top News

மஹிந்தவின் திட்டத்தை அம்பலப்படுத்திய பொதுபலசேனா முக்கியஸ்தர் ஞானசார தேரர்



ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியினர் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவை களத்தில் இறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசாங்கம் தமது தேவைகளுக்கு மாத்திரமே அரசியலமைப்பில் திருத்தங்களை உருவாக்கி கொள்கின்றதே தவிர மக்களின் நலன் குறித்து இதுவரை காலமும் எவ்வித அரசியல் திருத்தங்களையும் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தவில்லை.

அரசாங்கங்கள் தமது தேவைகளையும் அரசியல் இருப்பினையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அரசியலமைப்பு தொடர்ந்து மாற்றமடையும் போது அரசியலமைப்பின் தன்மை எந் நிலையில் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியினர் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவை களத்தில் இறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை முன்னாள் ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்றது. ஆனால் 18 ஆவது திருத்தம் இவருக்கு சாதகமாகவே உள்ளது.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலினை நடத்தி பொது எதிரணி ஆட்சி கைப்பற்றி 18 ஆவது திருத்தத்தினை மீண்டும் அமுல்படுத்தவே முயற்சிக்கின்றது. ஆனால் மறுபுறம் தேசிய அரசாங்கமும் தற்போது தேர்தல் தொடர்பில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிலையில் அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கிணங்க திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post