ஊடகவியலாளர் மாநாடு 2018.06.19
கடந்த ஐந்து வருடங்களாக மனித உரிமைகள் தொடர்பாகவும், எழுத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் எமது அமைப்பானது இன்று ஊடகங்களை சந்தித்துள்ளது, சமூக வலைத்தளத்தில் இன்று காணப்படும் முழு ஊடக சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக நாங்கள் உணர்கிறோம், நாட்டில் முஸ்லிம்கள் மீது வேண்டுமென்று வன்முறைகள் தூண்டப்படுகிறது இது திட்டமிட்டு நடக்கும் ஒரு சதி நடவடிக்கை போலவும் இருக்கிறது. தமிழ்-முஸ்லிம் , சிங்கள – முஸ்லிம் கலவரங்களை யாரோ தூண்டிவிடுவது போல எத்தனிப்புகள் நடைபெறுகிறது. இவற்றுக்கான காரணங்களை கண்டறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முஸ்லிம்கள் காரணியாக அமைந்துவிடக்கூடாது, இலங்கையில் முஸ்லிம் அபெ;படைவாத குழுக்களின் அதிகரிப்பினாலும், அவர்களின் விசமத்;தனமான கருத்துக்களாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள், உதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.ரி.ஜே) சொன்ன புத்தர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற கருத்தினால் பொதுபலசேனா எனும் அமைப்பு உருவாகி முஸ்லிம்களையும், முழு இலங்கையும் சின்னாபின்னமாக்கியது. குறித்த முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களை அரசு தடைசெய்ய வேண்டும். நாட்டில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் இருக்கிறது என சந்தேகிக்கும் அளிவிற்கு அவர்களின் நடடிவடிக்கை இருக்கிறது, குறித்த அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்னர் இலங்கை தேசத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அழகாக இருந்தது என்பதை ஞாபகப்படுத்தி;க்கொள்கிறோம்.
முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பெயர்தாங்கி கட்சிகளும், சிற்றூர் அரசியல் பிரமுகர்களும் இன்னுமொரு வகையில் காரணமாக அமைந்துவிடுகின்றனர் அவர்கள் சொல்லும் கருத்துக்களால், சிங்கள தமிழ் இனவாதிகள் கொதித்தெழுகின்றனர், அதனால் பிரச்சினைகள் உருவாகிறது. ஆக மொத்தத்தில் சாதாரண மக்கள் பிரச்சினைகளை தூண்டுவதில்லை, வெறும் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களும், அரசியல் வாதிகளுமே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கும் இனவெறிக்கும் காரணமாக இருக்கின்றனர். அரசு இதனை கவனத்தில் எடுக்க வேண்டும், எமது அமைப்பு இவர்களுக்கு பகிரங்க கண்டனத்தை வெளியிடுகிறது. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் தவ்ஹீத் அமைப்புக்களை தடை செய்யுமாறு இலங்கை அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு முஸ்லிம் அரசியல்வாதிகளின் விசமத்தனமான கருத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தற்பொழுது சிறையில் உள்ளார், இவர் உள்ளே சென்றிருப்பது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அல்ல என்றாலும், முஸ்லிம்கள் பலர் சமூக வலையில் சந்தோச கருத்துக்களை இட்டு வருகின்றனர், இந்த விடயம் மிக மோசமானது ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும், அவர் உள்ளே இருப்பதானல் முஸ்லிம்கள் மீதான் சிங்களவர்கள் வெறுப்பு இன்னும் அதிகரிக்கும் அதுமாத்திரமின்றி வேறு பல பிரச்சினைகளும் தோன்றலாம், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்து அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும்.
மாட்டிறைச்சி உண்பதை தடை செய்யக்கோரும் சிவசேனை அமைப்பை இலங்கையில் தடைசெய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த அமைப்பு வேண்டுமென்று பிரச்சினைகளை தூண்டி முஸ்லிம்-தமிழ் உறவை சீர்குலைக்கிறது அதன் எதிரொலியாக நாட்டில் பல பிரதேசங்களில் தாக்குதல்கள் இடம்பெறுகிறது. குறித்த அபை;பின் தலைவருக்கு நாங்கள் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம், புனித இஸ்லாத்தை ஏற்று அதன் மூலம் நல்லது செய்யுமாறும் இஸ்லாத்தை விளங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் அதிகளவு இருக்கிறது, அவற்றை நல்லாட்சி அரசு முடிக்க நினைத்தாலும் சிற்றரிசயல்வாதிகள் முடிப்பதாக இல்லை, இதனை அரசு கவனத்தில் எடுத்து முடித்து தரவேண்டும். மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திறக்கப்படுதல் வேண்டும்., அரச அலுவலகங்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முஸ்லிம்கள் தங்களின் தனித்தன்மை பேணும் ஆடை சுதந்திரத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்படுதல் வேண்டும், இஸ்லாமிய அடிப்படையில் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம் வானொலி என்பனவற்றை செய்ய அரசு முஸ்லிம்களுக்கு முழு ஊடக சுதந்திரம் வழங்கி அதனை காப்பாற்ற வேண்டும்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புகள், இணையத்தள நிருவாகிகளின் பாதுகாப்புகள் என்பனவற்றை உறுதி செய்தல் வேண்டும், ஊடகங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க கூடாது என்பனவற்றை இன்று ஊடகங்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்கிறோம்.
ஆசுக் றிம்ஜான் - தேசிய செயலாளர்
மனித உரிமைகள், ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு
Post a Comment