சப்னி அஹமட்
தலைமைகள் பல உருவில் இலங்கையில் இருந்தாலும் மும்மதத்தினாலும் மதிக்கப்படும் ஒரு தலைமைதான் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் . குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியதில் இருந்து பல துரோக வெட்டுக்களையும், குத்துக்களை பலரிடமிருந்து சுமந்த வடக்கு, கிழக்கு மக்களின் சேவகன் ரிசாத் பதியுத்தீன் அமைச்சர் பதவியை பெற்ற பின் கடந்த 30 வருடங்களாக அவதிப்பட்ட மக்களுக்கு நல்லெண்ணத்துடன் மக்கள் சேவைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
தன் மக்கள் என்றோ, தன் மதம் என்றோ, இல்லாமல் முவ்வீன மக்களுக்கும் சேவை செய்த இத் தங்க மகனை முழு நாடும் புகழ்போற்றியது, அது போல் ஒரு சில இனவாதிகளால் இவரை மக்கள் துரோகி என அரசியலுக்காக எதிர்த்தார்கள்.
அன்மைக்காலமாக வடக்கில், வில்பத்து காட்டினை அழித்து மக்களை குடியேற்றம் செய்கின்றார் என சில மத இனவாதிகளாலும், சில அரசியலுக்காக தன் இனம் என பாராது இவ் ஆளுமையை இகழ்ந்து பேசியதை முழு நாடும் அறிந்ததே. இதன் பின் புனர்வாழ்வு அமைச்சராக இருந்து அழிக்கப்பட்ட பல மக்களுக்கு முழுமையான சேவைகளை அம்மக்களுக்கு பூச்சியத்திலிருந்து ஆரம்பித்து கொடுத்த மகனை முவ்வீன மக்களும் மெச்ச ஆரம்பித்தார்கள் அல்லவா.?
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதி வாழ்வில் வாழ்ந்த மக்களை தான் சிறந்து முறையில் மனிதாபிமான முறையில் செயற்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமையை முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் இத்தலைமைக்கு பின்னால் சென்றதால் குறுகிய காலத்திற்குள் இவ்வாறு ஒரு ஆதரவா என முவ் மொழியிலும் வெளியேறியனர் சில இனவாதத்தை தூண்டும் மூத்தவர்கள், அவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அது போல்தான் சிங்கள சில இனவாதிகளால் மிகபெரும் எதிரியாக அமைச்சர் ரிசாத் பதியுதீனை பார்த்து வாந்தாலும், முழு வடக்கு சிங்கள தேரர்களும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் நல்ல நண்பர்களாக இருப்பதற்கான ஒரு சாட்சியம் தான் நேற்று (25) அரங்கேறியது , குறிப்பாக வவுனியா மாவட்டத்திலுள்ள 20 விகாரைகளின் விகாராதிபதிகள் விசேடமாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீனை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டு சிங்கள மக்கள் விரும்பு தலைமையாக ரிசாத் பதியுத்தீன் மிளிர்ந்துள்ளார்.
இனவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் ரிசாத் பதியுத்தீன் அமைச்சரின் ஆளுமையை நாமும் பாராட்டுகின்றோம்.
முஸ்லிம் சமூகத்தின் சிலரே! இவரை நீங்கள் விமர்சிப்பதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என புரிந்துகொள்ளும் மதநல்லிணக்கம் எழும் நேரத்தில் நீங்கள் அரசியலுக்காக நம் சமூகத்தின் தலைவனை இகழ்வது உங்களுக்கு நல்லதாக படுகின்றதோ..??
Post a Comment