Top News

முஸ்லிம் நாடுகள் மீதான டிரம்பின் தீர்மானத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆதரவு

Image result for trump
குறிப்பிட்ட சில முஸ்லிம் நடுகளைச் சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் விதித்திருந்த தடை உத்தரவுக்கு  அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
சிரியா, ஈரான், சோமாலியா, யெமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாதென டிரம்ப் ஏற்கனவே தடை விதித்திருந்தார்.  நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து டிரம்பின் இத்தடை  உத்தரவுக்கு எதிராக அந்நாட்டின் பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதால், டிரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப்பட்டு அந்த நாடுகளில் இருந்து வருபவர்களை, கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டால் மாத்திரம் போதுமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் டிரம்பின் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Post a Comment

Previous Post Next Post