யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடி கிழுறிய்யா மற்றும் குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாசல்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இலப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த நஷ்டஈட்டு நிதியை காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்து அவற்றை அபிவிருத்தி செய்ய பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது காத்தான்குடி கிழுறிய்யா மற்றும் குலபாஉர் ராஷிதீன் ஆகிய பள்ளிவாசல்களுக்கு முதற்கட்ட நஷ்டஈடாக தலா இரண்டரை இலட்சம் ரூபா பெற்றுக்கொடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment