Top News

யார் இந்த ரத்தினப்பிரிய ?



அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் அன்பாக எழுதிக்கொள்வது யாதெனில் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் .இரண்டு நாட்களுக்கு முன்னர் விசுவமடு இராணுவ சிவில் பாதுகாப்பு படையணியின் தளபதி இடமாற்றம் பெற்று சென்ற வேளையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்தி அழுததை யாவரும் முகநூலூடாக யாவரும் அறிந்திருப்பீர்கள் 


இது இவ்வாறு இருக்க இவர்கள் ஏன் இவ்வாறு அழுதார்கள் என்பதனை நாம் ஆழமாக ஆராய்ந்த போது கிடைத்த உண்மை சம்பவம் அதனை நான் எம் அன்பு மக்களுக்காக பகிருவதில் சந்தோசம் அடைகின்றேன் .


 யார் இந்த ரத்தினப்பிரிய

சிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் #மக்கள் #கண்ணீரோடுவழியனுப்ப காரணம் என்ன….

#போரால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வளியற்று இருந்த 3500 வடமாகாண மக்களிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.
இதன் மூலம் இன்றுவரை வடமாகாணத்துக்குள் மாதாந்தம் அண்ணளவாக 112 000 000/= ரூபாய்கள் புரள்கின்றன.

போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிளந்து, காலிளந்து, உடல் முழுதும் சன்னங்கள் நிறைந்து வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோர்கும் வேலை கொடுத்த மகான் இவர்.

வலயக்கல்வி பணிமனையின்கீழ் மாதாந்தம் 3000/= வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளீர்து 30,000/= மேல் வேதனம் பெறவைத்தார். அத்துடன் முன்பள்ளிகளின் கல்வி,கட்டடம்,தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார்.

share
கல்வி நிலையங்கள் ஆரம்பித்து தரம் 1 முதல் 11 வரை பலநூறூ மாணவர்கள் கற்க வழிசமைத்தார்.

பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவாயம், கைப்பணி, தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும்பல துறைகளில் நெறிப்படுத்தினார்.

இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து; நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார்.

போரால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட பாடசாலைகள்,கோவில்கள்,பல பொது இடங்களை துப்பரவு செய்துதந்தார்.

கோவிலே கட்டுவித்து விக்கிரகங்கள் பல செய்து கும்பாவிசேகமே செய்வித்தார்.

எம் பகுதியில் குளம்கூட கட்டுவிக்க துணை நின்றார்.

திணைக்களத்தினுள்ளே நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசை அணி என உருவாக்கி சாதனைகள் பல நாம் பெற வழிசெய்தார்.

திறனுள்ளவர்கள் பலநூறு பேரை உயர்கல்விக்குத்தானனுப்பி பல துறைகளில் Diploma, Degree
பெற செய்து அழகுபார்த்தார்.

வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார்.

திணைக்களத்திற்கு அப்பால், பல பொதுமக்கள், பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.

வேலை வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது, பணியாளர்களை படிப்படியாகி தரமுயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பொற்றுக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் ஒரு தமிழர் தன்னும் CSD இல் இணைய முன்வராத சந்தர்பத்திலும்; தான் துவண்டுவிடாது கடினப்பட்டு ஆரம்பத்தில் 20 பணியாளர்களை இணைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று தன் தலையை அடகுவைத்து, மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டி 3500 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொண்டார், இவரின் சேவைகள் ஒன்றா இரண்டா சொல்லிட முடியவில்லை……

அரசியல் நெருக்கடிகள்,நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.

பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து; உதவிகள் பல செய்து தாயாய்,தந்தையாய்,அண்ணனாய்,நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.

நாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும், எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவனைத்த உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது?

இதனை பார்க்கும் போது தேசியம் தேசியம் என்று பிதட்டி திரிகின்றவர்கள் இதுவரைக்கும் மக்களுக்கு எதாவது நல்லது செய்தார்களா ?? சும்மா விதண்டாவாதம் மட்டுமே கதைக்க தெரியுமே தவிர இவர்களால் எதுவுமே செய்ய முடியாது அனந்தி ,சிவாஜிலிங்கம் போன்றோர் கையலகத்தவர்கள் .இவர்களால் மக்களுக்கு மிஞ்ச போவது வெறும் கண்ணீர் மட்டுமே  


நன்றி எம் எம் எம் நுஸ்ஸாக்

Post a Comment

Previous Post Next Post