மீண்டும் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள இடத்தில் நல்லிணக்கத்துக்கு இடமில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்தார்.
வடக்கில் இன்று சட்டம் இல்லை. பொலிஸார் பாதையில் இறங்கி நடமாட முடியாது. தென் இந்திய திரைப்படங்களில் உள்ளவாறு அங்கு சமூகமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையை நிருவகிக்க அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கு முடியாமல் போயுள்ளது.
இந்த நாட்டில் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது எமது அரசாங்கம். நாம் 12500 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தோம். இன்று அவர்கள் பொலிஸில் சிவில் பாதுகாப்பு பிரிவில் சேவை புரிகின்றனர். உண்மையான நல்லிணக்கம் என்பது இதுவாகும்.
வடக்கில் விஜயகலா கூறிய கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இவ்வளவுக்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பார். நாட்டின் சட்டம் என்பது ஒன்று. கட்சியின் சட்டம் என்பது வேறு ஒன்று. கட்சியின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முன்னர் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
Post a Comment