பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“கோத்தபாய ராஜபக்சவை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டு எதிர்க்கட்சின் முக்கியஸ்தர்கள் சிலர் றோ உடன் இணைந்துள்ளனர்.
பிரதரம் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒன்றை தொடர வைக்கும் நோக்கிலேயே” அவர்கள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment