கல்முனை மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை குறித்த பள்ளிவாசல் நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்வடிக்கல் நாட்டு விழாவில் மாவடிப்பள்ளி மதரசாவின் அதிபர் முபாறக் மௌலவி, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். சத்தார், சட்டத்தரணி அன்புமுகைதீன் றோசன், எம்.எஸ்.எம். நிசார், ஏ.எம். பைறூஸ் மற்றும் உலமாக்கள், மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசல் நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.
இக்கட்டட நிர்மாணப் பணிகளை அடுத்துவரும் றமழான் மாதத்திற்கு முன்னதாக நிறைவடையச் செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Post a Comment