தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோற்றுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பல குறைப்பாடுகள் நடந்தன. இந்த குறைப்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கம்பஹா, ரத்துபஸ்வல சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். எமது கட்சி கிளைகளை சேர்ந்த 21 பேரின் கால்களில் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் ஏற்பட்டன.
இதனை பார்க்கும் போது இவர்கள் வடக்கிலும் இப்படிதான் கொலை செய்திருப்பார்கள் என்று எனக்கும் எண்ண தோன்றுகிறது. இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல்.
ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தவும் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தவும் யார் ஆணையிட்டது என்பது தற்போதும் கேள்விக்குரியாக உள்ளது. நடந்த இந்த சம்பவத்திற்காக ரத்துபஸ்வல கிராமத்திற்கு சென்று மன்னிப்பு கோரினேன்.
திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் இருக்கும் போது, அவற்றை திருத்திக்கொள்ளாமல், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று முட்டாள்கள் போல் கூறிக்கொண்டு, இறுதியில் தோல்வியை தழுவ வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டியது முன்னாள் ஜனாதிபதியின் பொறுப்பு. யார் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தாலும் நானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன்.
சிறுபான்மை மக்களிடம் உள்ள எதிர்ப்பை சரி செய்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை எதிர்ப்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment