Top News

பொதுஜன பெரமுனவின் நிகழ்வில் முதன் முறையாக கலந்து கொண்ட கோத்தபாய,காரணம் இதுதான்!

Related image

கடந்த பெப்ரவரி மாதம் பெற்ற வெற்றியை அடுத்து இரண்டாம் இன்னிங்சில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்காக கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல சக்திகள் ஒன்றிணைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு அங்கத்துவ அட்டைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் கூறுகையில்,

ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் மோதல்கள் இருப்பதாக பரவி வரும் செய்திகளை மறுப்பதற்காக இந்த நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

வியத் மக, கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன மகிந்த சிந்தனையை முன்னெடுத்துச் செல்கின்றன எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, முதல் முறையாக இன்று பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டார்.

அத்துடன் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post