தமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள்.
இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழர்கள் அரசாங்கத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இணையான வளப்பங்கீடு தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் பௌத்த சிங்களவர் அல்லாத மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு. ஆனால் அதற்காக மக்களிடம் பொய் சொல்வதற்கு நான் தயாராக இல்லை.
அரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும்.
ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் போன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த நிலையில் 39 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஏறாவூர்பற்று பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.
தமிழர்கள் காலம் பூராகவும் எதிர்க்கட்யில் இருக்க முடியாது. எழுச்சி பெற வேண்டும். இனிமேலாவது அதிகாரங்களை குவித்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் பங்காளியாக மாறவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் எமது கதைகளை செவிமடுப்பார்கள் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment