திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற குழு அறையில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சு, சுகாதார அமைச்சு, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு ஆகியவற்றினூடாக மேற்கொள்ள முடியுமான திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக பிரஸ்தாப அமைச்சின் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.
அத்துடன் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக செய்ய முடியுமான சிறிய அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான படிவங்கள் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், பிரதமரின் ‘கம்பெரலிய’. வேலைத்திட்டத்தை தங்களது ஊர்களில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டன.
இதில் கட்சியின் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம், அலி ஸாஹிர் மௌலானா, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நஸீர், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Post a Comment