இலங்கையில் இயங்கும் அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக மனித உரிகைள மற்றும் ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான முஸ்லிம் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் ஆசுக் றிம்ஜான் தனிமனித பேராட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் முன்றலில் இன்று முன்னெடுத்தார்,
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், பொதுபலசேனா, சிவசேனா, சிங்கள ராவய, உள்ளிட்ட மதரீதியான கடும்போக்கு அமைப்புகளை இலங்கையில் தடைசெய்வதன் மூலம் இனவாத சம்வங்களை தடுக்க முடியும், இதற்கான போராட்டத்தை தான் இலங்கையிலே ஆரம்பித்தேன், இது பற்றி ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினேன். அதனடிப்படையில் . ஐக்கிய நாடுகள் சபை வரை இப்போராட்டத்தை எனது அமைப்பு கொண்டுவந்திருக்கிறது.
அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மதரீதியான அமைப்புகளே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆரம்பிக்க காரணமாக இருந்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கௌதம புத்தர் மாட்டிறைச்சி சாப்பி்ட்டார் என்ற ஒரு கருத்தினால் பொதுபலசேனா அமைப்பு உருவாகியது, இதனை தொடர்ந்து இலங்கையில் பொதுபலசேனா பல பேராட்டங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தோற்றுவித்தது ஆக அனைத்திற்கும் காரணம் SLTJ தான், அதேபோல சிவசேனா அமைப்பு தோன்றி கருத்துக்களை கூறிவருகிறது. இதுவும் உகந்ததல்ல.
ஆக மொத்தத்தி்ல் அடிப்படைவாத இயக்கங்கள்தான் இவைகளை தடைசெய்வதன் மூலம் இனவாத பிரச்சினைகளை தடுக்க முடியும், இதனை அரசு உடன் செய்ய வேண்டும் என்றார். அமைப்பின் அறிக்கைகள் அடங்கிய குறிப்பேடு இன்று ஐ.நா மனித உரிகைள் மன்றத்தில் சமர்ப்பி்க்கபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்
Post a Comment