Top News

பொருளாதாரம் நலிவடைவதற்கு பௌத்த மதமே காரணம் -உறுப்பினர் சஜீவன்


எஸ்.நிதர்ஷன்
இலங்கையில், தமிழர்கள் இறப்பதற்கும் தமிழர்களது பொருளாதாரம் நலிவடைவதற்கும், பௌத்த மதமே காரணம் என, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை, வடமாகாண ஆளுநர் நாட்டியுள்ளார். அத்துடன் தையிட்டி ஜே 250 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணியொன்றையும் தேரர்கள் உரிமை கோரியுள்ளனர்.
“இவ்வாறான நிலையில் தேரர்கள் உரிமை கோரும் காணியின் உறுதிபத்திரம் தொடர்பாக எமக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றது. அதனை நம்ம முடியாத நிலை உள்ளது” என்றார்.
“அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழர் தாயக பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், முல்லைதீவானது தற்போது பறிபோய் உள்ளது. இப்போது யாழ்ப்பாணத்தில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் துணை போகின்றார்.
“ஏற்கெனவே யாழ். குடாநாடு உட்பட வடக்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது விகாரைகளை அமைத்து அங்கு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது.

“இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் அஙப்பதற்கும் தமிழர்களது பொருளாதாரம் நலிவடைவதற்கும் பௌத்த மதமே காரணம். எனவே இவ்விகாரை பிரச்சினை தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்களும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்க கூடிய அங்கஜன், வியஜகலா மகேஸ்வரன் போன்றவர்களும் தலையீட்டு, முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post