எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம் - நாமல்ராஜபக்‌ஷ

NEWS
0


தேர்தல் முறையினை  மாற்றுவதற்கு வாக்களித்தவர்களேஇன்று  அநியாயம்  நடந்து விட்டதாக கூறுவது வேடிக்கையான  விடயம்என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்றுபாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

புதிய முறைமையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கானசட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போதுஅதற்கு எதிராக வாக்களித்த ஒரே அணி கூட்டு எதிரணியாகும்.அரசினால்முன்வைக்கப்பட்ட குறித்த கலப்பு தேர்தல் முறையில் நடைமுறைசிக்கல் இருப்பதை நாம் அன்றே சுட்டிக்காட்டி இருந்தோம்.அதேபோலசிறுபான்மை கட்சிகளுக்கும் அம்மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்என்பதையும் நாம் அன்றே சுட்டிக்காட்டியிருந்தோம்அதனைபொருட்படுத்தாது சிறுபான்மை கட்சிகள் ஆதரவாக புதிய தேர்தல்முறைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

இந்த தேர்தல் முறையின் காரணமாக ஏற்படப்போகும் அபாயம் குறித்துஏற்கனவே தாராளமாக பேசியாகிவிட்டது.அதே போல கடந்தஉள்ளூராட்சி சபை தேர்தலில் நடைபெற்ற குளருபடிகளை நாம்நடைமுறையில் கண்டுகொண்டோம்.

இன்று நடைபெற உள்ள வாக்கெடுப்பில் நாம் எல்லை நிர்ணயஅறிக்கைக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம்.

தம் தலைகளில் தாமே மண்ணை அள்ளி போட்டு விட்டு இப்போது தவறுநடந்துவிட்டதாக கூறுவதில் எவ்வித பலனும் இல்லை என அவர்குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top