Top News

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் சாணக்கியமே சமூகத்தின் வெற்றி- ஆப்தீன்



எல்லை நிர்ணய அறிக்கையில் புதிய தொகுதி உருவாக்கத்தில் சிறுபான்மைச் சமூகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அன்று முதல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் இதனைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு முன்னெடுத்தார் என பிரதேச சபை உறுப்பனர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார்

இந்த புதிய முறை சாரியாக அமையாது, காலத்தை நீடிக்காது பழைய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனாலும், இதன் விளைவுகளை பலர் அன்று உணர்ந்திருக்கவில்லை. புதிய முறையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்தினால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பழைய முறையிலே தேர்தலை நடாத்த வேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உட்பட ஏனையவர்களும் வலியுறுத்திய போது, அதனைக்கணக்கிலெடுக்காத அரசாங்கம், புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடாத்திய பின்னர் விளங்கிக் கொண்டது.

பழைய முறையில் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு எல்லாக்கட்சிகளும் உடன்பட்டாலும் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சி புதிய முறையில் தான் தேர்தலை நடாத்த வேண்டுமென விடாப்பிடியாகச் செயற்பட்டது.

இதனால், ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த தேர்தல் முறையின் பாதிப்புகளை புதிய உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமைகளை விளக்கி பழைய முறையில் தேர்தலை நடத்துவதின் அவசியத்தை உணர்த்தி சிறுபான்மைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இந்த தேர்தல் முறையில் ஏற்படும் தவறான விளைவுகளையும் விளங்கப்படுத்தினார், இந்தக்கருத்தில் எல்லாக் கட்சித்தலைவர்களும் ஒன்றுபட்டாலும், சுதந்திரக்கட்சி பிடிவாதமாக இருந்து.

புதிய முறையில் தேர்தலை நடாத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிகை எடுத்த போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் தோற்கடிப்போமென்று சூளுரைத்தார்.

இந்த எல்லை நிர்ணய அறிக்கை வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் உட்பட மலையகத்தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதனால், அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா போன்றோர்களுடன் இணைந்து ஏனைய கட்சிகளின் ஆதரவை இந்த எல்லை நிர்ணய அறிக்கைக்கெதிராகப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாட்டில் இந்த அறிக்கையைத் தோற்கடிக்க கூட்டு எதிரணியின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனும், பேசவிருப்பதாகவும், எனைய கட்சிகளுடனும் பேசி ஆதரவைப்பெற்று இதனை தோற்கடிப்போமென சவால் விட்டிருந்தார்.

அதற்கமைய பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அண்மையில் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து அவர்களின் ஆதரவையும் கோரியிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படம் முகநூலில் வெளியிடப்பட்டு தவறான கருத்துகள் பகிரப்பட்டதை நாமறிவோம்.

யார் தன்னை எவ்வாறு விமர்சித்தாலும் தன் சமூக உரிமையை எவரைச் சந்தித்தாலும் நிறைவேற்றுவேன் என்ற துணிவோடு செயற்பட்டார்.

அதன் விளைவாக, இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு 139 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இறைவனின் உதவியுடன் பல சாவால்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது சமூகப்பொறுப்பையும், சவாலையும் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post