முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளது எனக்கூறுவது நாட்டின் பாதுகாப்பிற்கு களங்கம் - ஆப்தீன்

NEWS
0


முஸ்லிம்கள் வசம் ஆயுதம் உள்ளது  என முன்னாள் புலி அங்கத்தவர் ஒருவர் பகிரங்கமாக அறிக்கை விட்டிருப்பதுநாட்டின் பாதுகாப்பிற்கு களங்கம் விளைவிக்கும் செயல் என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் நீதி மற்றும் மனித உரிமையை நிலைநாட்டும் சமாதான நீதவான்கள் பேரவையின் ஆலோசகருமான தமீம் ஆப்தீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலம் அவர் கருத்து தெரிவிக்கையில்,  முஸ்லிம்கள் வசம் ஆயுதம் உள்ளதா இல்லையா என்பதை கூற இவர் யார்? இவரை யார் இயக்குகின்றனர், முதலில் இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும், இவரின் கருத்து தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைவர்கள் இதுகுறித்து அதிகவனம் எடுக்கவேண்டும், இல்லையேல் இவைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top