Top News

கட்டாரில் நான்கு தினங்களில் நால்வர் மரணம் காரணம் என்ன (முழுவிவரம்)



Dr ஏ.எச். சுபியான் 
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
கட்டார்
கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­தி­களில் அனே­க­மா­னவை இளம் வயது மர­ணங்­க­ளாக அமைந்­தது. பெரும்­பா­லான மர­ணங்­க­ளுக்கு மார­டைப்பு  கார­ண­மாக அமைந்து. இம் மர­ணங்கள் நேற்­றைய எனது இரவை கண­மாக்­கி­ய­தோடு நாளைய நாள் நானா­கவும் இருக்­கலாம் என்ற எண்­ண­மா­கவும் இருந்­தது. இரும்புக் கோட்­டையில் இருந்­தாலும் ஒவ்­வொ­ரு­வ­ரையும் மரணம் குறித்த கணத்தில் இறைவன் நாட்­டப்­படி வந்தே தீரும்.

இங்­குள்ள வாழ்க்கை முறை, மித­மிஞ்­சிய மன அழுத்­தங்கள் போன்­றவை பல தொற்ற நோய்­க­ளான(Non Communicable Disease) Ischemic Heart Disease(Heart Attack),Diabetes Mellitus, Hypertension, Hyper cholesterol போன்­ற­வைக்கு கார­ண­மாக அமை­வ­துடன் மிக குறைந்த விலையில் கிடைக்கும் Cigarettes/புகைத்­தலும்(Smoking) கார­ண­மாக அமை­கி­றது.

இன்­றைய காலை வேளை ஆரம்ப முதல் எனது வகுப்பு தோழன் தற்­போது கத்­தாரில் வேலை செய்யும் சகோ­தரர் முப்லி ஜப்­பாரின் மரண செய்தி அதிர்ச்­சி­யாக அமைந்­தது.

இந்த இடத்தில் சமீப கால­மாக இளை­ஞர்­க­ளையும் பலி கொள்ளும் மார­டைப்பு (HEART ATTACK) ஏன் ? எப்­படி? வரு­கி­றது என்­பது பற்றி இந்த இடத்தில் நோக்­கு­வது பொருத்தம் எனக் கரு­து­கிறேன்.

Heart Attack(மார­டைப்பு) என்ற பெயரை உச்­ச­ரித்­தாலே வய­தெல்­லை­யின்றி அச்­சத்­துடன் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். ஒரு கால­மி­ருந்­தது 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கே மார­டைப்பு அதிகம் ஏற்­பட்­டது. பின்னர் 50,40 என்­றாகி தற்­போது 30 வய­திலும் மார­டைப்பு ஏற்­ப­டு­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக 26,28 வயதில் மார­டைப்பு ஏற்­பட்­ட­வர்­க­ளையும் நான் சந்­தித்­துள்ளேன் .உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் இறப்­பிற்­கு­ரிய முதன்­மை­யான கார­ணி­யாக அமை­வது மார­டைப்­பாகும்.

மார­டைப்பு என்றால் என்ன?
இதயம் சுருங்கி விரி­வதன் மூலம் உடம்­பி­லுள்ள பல்­வே­று­பட்ட பகு­தி­க­ளுக்கு ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குருதி நாடிகள் மூலம் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது. இத­யத்­தி­லி­ருந்து வெளி­யா­கின்ற ஏறு பெரு­நா­டியில் (Ascending Aorta) இருந்து உரு­வா­கின்ற முடி­யுரு நாடிகள் (Coronary Arteries)வலது,இடது என பல கிளை­க­ளாக பிரிந்து இதயம் சுருங்கி விரிய தேவை­யான ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குரு­தியை வழங்­கு­கி­றது.

மேற்­படி முடி­யுரு நாடி­களில் ஏற்­ப­டு­கின்ற அடைப்­புகள்/தடைகள் கார­ண­மாக இத­யத்­திற்குச் செல்­லு­கின்ற ஒட்­சிசன் ஏற்­றப்­பட்ட குரு­தியின் அளவு குறை­வ­டை­வ­தனால் இத­யத்தின் தசை­களில் பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது.

முடி­யுரு நாடி­களை ஒரு குழாய் என்ற ரீதியில் கற்­பனை செய்தால் இதன் உள்­ப­குதி (Lumen) எவ்­வித தடை­யில்­லாமல் காணப்­படும். பல்­வேறு செயற்­பாட்­டினால் மேற்­படி முடி­யுரு நாடி­களின் உட்­புற சுவர்­களில் Atherosclerosis என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு இத­னு­டைய அமைப்பு பல்­வே­று­பட்ட கார­ணங்­க­ளினால் பெரி­தாகி மாற்றம் ஏற்­படும் போது (Plaques with Blood clots) உட்­புற சுவரின் விட்டம் குறைந்து செல்லும்.

இதனால் முடி­யுரு நாடி­களின் உட்­புற சுவரின் விட்டம் குறை­வ­டைந்து செல்­வ­தனால் இத­யத்­திற்­கு­றிய இரத்த ஓட்டம் குறையும். ஒரு நிலையில் மேற்­படி Atherosclerosis உட்­புற சுவரை பூர­ண­மாக தடை செய்­வ­தனால் இத­யத்­திற்­கு­றிய இரத்த ஓட்டம் முழு­வ­து­மாக தடைப்­ப­டு­வதால் மரணம் ஏற்­ப­டு­கி­றது.

மார­டைப்­புக்­கான  கார­ணிகள்
1)வயது (வயது கூடி செல்­லும்­போது மார­டைப்பு ஏற்­ப­டு­வ­தற்­கு­றிய நிகழ்­த­கவு அதிகம்)
2)பால் (ஆண்>பெண்)
3)மார­டைப்பு சம்­பந்­த­மான குடும்ப வர­லாறு (குடும்­பத்தில் அதிலும் மிக நெருங்­கி­ய­வர்­க­ளுக்கு 55வய­திற்கு முன் மார­டைப்பு ஏற்­பட்டால் நிகழ்­த­கவு அதிகம்)
4)புகைத்தல் (Smoking)
5 உயர் குரு­தி­ய­ழுத்தம் )High Pressure(Hypertension)
6 ) High Cholesterol (Lipid Profile இல் LDL கூடி/HDL குறை­வ­டை­கின்ற போது மார­டைப்­பிற்­கான நிகழ்­த­கவு அதிகம்)
7) நீரி­ழிவு நோய்(Diabetes Mellitus)
8) உடல் பருமன் (Obesity)-Body Mass Index(BMI) உங்கள் நிறையை உங்கள் உய­ரத்­தினால் (Meter) வகுத்து வரும் பெறு­மா­னத்தை மீண்டும் உய­ரத்­தினால் வகுத்து வரும் பெறு­மானம் 25ஐ விட அதி­க­ரிக்கும் போது மார­டைப்பு ஏற்­பட வாய்ப்பு அதிகம்
9) Sedentary Life Style (அசை­யாமல் ஒரு இடத்­திலே தொடர்ச்­சி­யாக இருந்து கொண்டு Phone,TV,Computer பாவிப்­பது......போன்­றவை)
10)முறை­யான உடற்­ப­யிற்சி இன்மை
11)முறை­யற்ற உணவு பழக்கம்
இவற்­றை­விட தற்­கால உலகில் *மன­அ­ழுத்­தத்­துடன் கூடிய வாழ்க்­கையும்(Stressful Life) பிர­தா­ன­மாக அமை­கி­றது.
மார­டைப்பின் அறி­கு­றிகள் (Symptoms of Heart Attack)
மார­டைப்பின் அறி­கு­றிகள் வயது,மார­டைப்பு ஏற்­பட்ட இத­யத்தின் பகுதி,நீரி­ழிவு போன்ற வேறு நோயுள்­ள­வர்கள் போன்­ற­வற்­றிற்கு அமைய வேறு­படும்.

1) நெஞ்­சு­வலி(Chest Pain)- ஏறத்­தாழ அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு இலே­சான நெஞ்சு வலி­யுடன் ஆரம்­பிக்கும்.பொது­வாக இடது நெஞ்சு பகுதி/நடு நெஞ்சில் இறுக்கி பிடிப்­பது போன்ற நோவு மெது­வாக விட்டு விட்டு ஆரம்­பித்து நேரம் செல்லச் செல்ல வலி கூடு­வ­துடன் இந்த நோவு கழுத்து,இடது தோள்­பட்டை,இடது தாடை,இடது கைக­ளுக்கும் பரவும். இது 20 நிமி­டத்தை விட அதி­க­மாக இருக்கும்.எந்­த­வித நோவு இல்­லா­மலும் மார­டைப்பு ஏற்­ப­டலாம்(Silence Heart Attack).இதையே இரவில் தூங்­கி­யவர் காலையில் மரணம் அரு­கி­லுள்­ள­வ­ருக்கு கூட அறி­ய­வில்லை என்று சொல்­லப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­க­ளாகும்.
இதை தவிர இத­யத்தின் கீழ்ப்­ப­கு­தியில் ஏற்­ப­டு­கின்ற மார­டைப்பு(Inferior Heart Attack) வயிற்­றுப்புண்(Gastric Ulcer)அறி­கு­றி­யான நெஞ்சி எரிவு(Burning Sensation) குமட்டல் போன்ற ஒத்த அறி­கு­றி­க­ளாக அமையும்.
இன்று காலை மர­ண­மா­கிய சகோ­த­ர­ருக்கு நெஞ்சு வலி ஏற்­ப­ட­வில்லை.நெஞ்சு எரிவு ஏற்­பட வழமை போன்று Gastritis/Ulcer என பலர் நினைப்­பது போன்று அவரும் நினைத்­துள்ளார்.இடது கை இலே­சான வலியை தவிர வேறு எந்த அறி­கு­றியும் இல்லை. இதே மன­நி­லையில் தான் நாம் பலர் உள்ளோம்.இவ்­வா­றான அறி­கு­றிகள் ஏற்­படும் போது சூடான நீர் (Hot Water) வெள்ளை பூண்டு(Garlic) சாப்­பி­டு­வ­திலும் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­ச­ர­மாக செல்­ல­வேண்­டிய Golden Time வீடு­களில் கழிப்­பதால் பல மர­ணங்கள் நிகழ்­கின்­றன.
வய­தா­ன­வர்கள், நீண்ட கால நீரி­ழிவு நோயா­ளிகள் எவ்­வித நெஞ்சு நோவு இல்­லாமல் சில வேளை தலை சுற்று/மயக்கம் மட்டும் மார­டைப்­பிற்­கு­ரிய அறி­கு­றி­க­ளாக அமையும்.
இதை தவிர இந்­நோ­வுடன் 
-வாந்தி(Vomiting)
-குமட்டல்(Nausea)
-அதிக வியர்வை(Excessive Sweating),
-நெஞ்சி பட பட­வென்று அடித்தல்(Palpitation) 
- மூச்சு தினறல்
-தலை சுற்று/மயக்கம்
மார­டைப்பை எவ்­வாறு கண்­டு­பி­டிக்­கலாம்?
1)Clinal History 
2)ECG-Electro Cardio Graph
மேற்­படி அறி­குறி ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அணு­ம­திக்­கப்­ப­டு­கின்ற போது ECG மாற்­றங்கள் மூலம் மார­டைப்பு ஏற்­ப­டு­வதை உறுதி செய்­யலாம்.இதன்­போது ECG எவ்­வித மாற்­ற­மின்றி தொடர்ச்­சி­யாக அறி­கு­றிகள் இருக்கும் போது மீண்டும் மீண்டும் ECG எடுக்­கப்­படும். சில­ருக்கு ஓய்வு நேரங்­களில் எவ்­வித நோவும் இல்­லா­மலும் இயக்­கத்தின் போது மட்டும் நெஞ்சு நோவு ஏற்­ப­டு­வதால் ஓய்வு நிலையில் ECG எடுப்­பதால் இதில் எவ்­வித மாற்­றத்­தையும் காண முடி­யாது.இதன்­போது Exercise ECG பரிந்­துரை செய்­யப்­படும்.
3)Cardiac Enzymes
4)Cardiac Catheterisation/Angiography(மேற்­படி இத­யத்­திற்கு குரு­தியை வழங்­கு­கின்ற முடி­யுரு நாடி­களில் எங்­கெல்லாம் அடைப்பு உள்­ளது(block),எத்­தனை வீதத்தில் அடைப்பு உள்­ளது போன்­றவை அறிய முடியும்.இத­ன­டிப்­ப­டை­யிலே மருந்து பாவிப்­பதா? Or Bypass Operation என்­பன தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.
மார­டைப்பை முகாமை செய்தல்
மேற்­படி அறி­கு­றிகள் ஏற்­ப­டு­மி­டத்து அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு உட­ன­டி­யாக அனு­ம­திக்க வேண்டும்.இதை தவிர வீடு­களில் வைத்து வீட்டு வைத்­தியம் செய்தல்,தனியார் மருந்து நிலை­யங்­க­ளுக்கு(Private Medical Centre)செல்லல் போன்­ற­வற்­றினால் வைத்­தி­ய­சா­லைக்கு செல்ல இருக்­கின்ற நேரம் தாம­திப்­பதால் இதய தசை கலங்கள் மீள் முடி­யாத சாவுக்கு உள்­ளா­கின்­றனர். மார­டைப்பு ஏற்­பட்டு குறிப்­பிட்ட நேரத்­திற்குள் உரிய சிகிச்சை எவ்­வ­ளவு முன்­கூட்டி வழங்­கப்­ப­டு­கின்­ற­தற்கு அமைய சிக்­கல்கள் தடுக்­கப்­ப­டு­கி­றது.
வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட ஆரம்ப சிகிச்­சைக்கு பின் பின்­வரும் ஆலோ­ச­னை­களை வழங்­கப்­படும்.இவற்றை உரிய முறையில் தவ­றாமல் பின்­பற்ற வேண்டும்.
-தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை
-தொடர்ச்சியான பரிசோதனைகள் ( Regular Check up-Monthly Fasting Blood Sugar,Weight&Blood Pressure six monthly Fasting Lipid Profile)
-தொடர்ச்சியான மருந்து பாவனை
-மேலதிக பரிசோதனைகள்/சிகிச்சைகள்
- வாழ்க்கை ஒழுங்கை சீரமைத்தல்
- ஆரோக்கிய உணவுப் பழப்பம்
- புகைத்தலை நிறுத்துதல்
- தொடரான உடற்பயிற்சி (வேகமான நடை,ஓட்டம்,நீந்துதல்,சைக்கிள் ஓடுதல் போன்றவை.இவை உள்ளத்தில் பதித்து உணர்வுகளுடன் செய்யும் போதே மூளையில் இதற்குறிய நரம்பு இரசாயன பதார்த்தங்கள் சுரக்கப்பட்டு உடலில் மாற்றம் ஏற்படும்.
- மன அழுத்தமற்ற ஓய்வான வாழ்க்கை
*பலரது எண்ணம் மாரடைப்பு ஏற்பட்டு Bypass Operation செய்துவிட்டால் அதன் பின் எல்லாம் முடிந்து விட்டது.வழமை போன்று பழைய வாழ்க்கையை தொடரலாம் என எண்ணி கிளினிக் செல்லாமலும்,மாத்திரை பாவிக்காது ,விரும்பியவற்றை சாப்பிட்டு,மீண்டும் புகைக்க தொடங்குகின்றனர்.இது முற்றிலும் தவறாகும்.இதனால் மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்படலாம்/இதய தொழில்பாடு குறைந்து செல்லல்-Heart Failure/இறப்பு-Death போன்றவை ஏற்படலாம்.
எனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள்/ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றுவதால் இவற்றின் பாதிப்புகளை/இறப்பை இறைவன் நாடினால் தவிர்ந்து கொள்ளலாம்.
​-Vidivelli

Post a Comment

Previous Post Next Post