அக்கரைப்பற்று எழுவெட்டுவான் மைதானம் அழிக்கப்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் கடந்து நின்கின்றது.
சேகு இஸ்ஸதீனக்கு விளையாட்டு கழகங்கள் ஆதரவு வழங்குகின்றன. ஏன்ற காரணத்தினால் இரவோடு இரவாக திட்டம் தீட்டப்பட்டு மைதானத்தின் நடுப்பகுதிகளால் பொலிஸ் பாதுகாப்புடன் சுவர்கள் எழுப்பிய விளையாட்டு வீரர்களும் சமூகவியலாளர்களும் கண்ணீர் சிந்திய நாள்.
25,30 வயதைத் தொட்ட இளைஞர்கள் இன்று இவ் மைதானத்தை அனுபவிக்க முடியாமல் கபளிகரம் செய்த நாள்.
15 வருடங்கள் ஆட்சியிலிருந்த போதும் ஒரு லோடு மண்ணைக் கூட இம் மைதானத்தில் கொட்ட முடியாமல் எங்களை ஏமாற்றியவர்கள் மைதானத்தின் காணிகளை கொள்ளையிட்டவர்கள் இம் மைதானத்தின் அபிவிருத்தியை மீண்டும் தடுத்து நிறுத்த வழிகளை தேடுகின்றனர்.
அதே போல் பதூர் நகர் பிரதேசத்து இளைஞர்கள் விளையாடும் மைதானத்தின் பார்வையாளர் அரங்கை அமைப்பதை தடுத்தார்கள்.அம் மைதானத்தில் நடப்பட்ட தூண்கள் வெயிலோடும் மழையோடும் உறவாடிக் கொண்டிருக்கின்றன இதனால் உங்களுக்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன? எதைச் சாதித்தீர்கள்.
உங்கள் பதவி வெறிக்காக அக்கரைப்பற்றின் மைதானத்தையும் விளையாட்டையும் அழித்தவர்கள் வெட்கமில்லாமல் எப்படி உங்களால் வேறு பிரதேசத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அதிதியாக செல்கின்றீர்கள்.
இறைவன் கைவிடவில்லை எங்கள் கண்ணீரை துடைக்க தவம் கை கொடுத்தான்.இன்று அம்பாரை மாவட்டத்தில் சிறந்த மைதானமாக எமது எழுவெட்டுவான் மைதானம் தலை நிமிர்கிறது.
இதற்கு நிதியுதவி செய்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கும் அக்கரைப்பற்றின் அபிவிருத்திக் குழுத் தலைவர் ஏ.எல்.தவத்திற்கும் அக்கரைப்பற்று இலவன் ஏஸ் கழகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
Post a Comment