அம்பாறை மாவட்டத்தில் சுமார் 35000 ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாகவும், அதுவும் கடந்த ஆட்சியில் அதிதீவிரமாக இது இடம்பெற்றதாகவும் அவைகளை நல்லாட்சி மீளப்பெற்றுத்தர வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நீதியை காப்பதற்கான சமாதான நீதவான்களின் பேரவையின் ஆலாசகரும் பிரதேச சபை உறுப்பினருமான தமீம் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் அம்பாறையில் இழந்துள்ள காணிகள் அனைத்துமும் வரலாற்றை ஞாபகப்படுத்தும் பூர்வீக நிலங்களாகும், இவைகளை மீட்டெடுக்க நாங்கள் கொண்டுவந்த நல்லாட்சி இன்று இதனை செய்யாமல் துாங்கிக்கொண்டிருக்கிறது.
தமிழர்களுக்கு வடக்கில் மீளக்கொடுக்க முடியுமென்றால் ஏன் கிழக்கில் முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது, இதனை யார் தடுக்கிறார்கள், வட்டமடு முராணைவெட்டி, அஸ்ரப் நகர், உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்னும் மக்கள் காணிகளின்றி, வாழ்வாதாரங்களுக்கு வழியின்றி கஸ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். என்றார்.
Post a Comment