வரலாற்று தோல்வியை எதிர்கொண்ட இலங்கை வெளியேற்றம்

NEWS
0
Srilanka Cricket Team 
ஐந்து தடவைகள் ஆசிய கிண்ண தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி, இந்தமுறை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடனேயே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 137 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி கண்டிருந்தது. இதனை அடுத்து நேற்று இலங்கை அணி தமது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடியாது.

இதில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்களைப் பெற்று, 250 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது. எனினும் இலங்கை அணி 41.2 ஓவர்களில் 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இதன்படி 2018 ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கட் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி கண்ட முதலாவது ஒருநாள் சர்வதேசத் தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top