ச.அஹமட்
இன்று நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற குத்பா பிரசங்கத்தை நிகழ்த்தினார் நிந்தவூர் பிரதேச செயலாளர் மௌலவி. முகம்மது அன்சார் அவர்கள்.
நிந்தவூரின் சரித்திரத்தில் உத்தியோக ரீதியில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியது இதுவே முதற் தடவை என நினைக்கின்றேன்.
தற்போது அவரது நிர்வாகப் பரப்புக்குட்பட்ட நிந்தவூரில் ஏற்பட்டுள்ள ஒரு அவல நிலையை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக குத்பா மேடையை பிரதேச செயலாளர் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.
அவரது பிரசங்கம் முழுவதும் திசை பிறழாத வகையில் போதைப் பாவனை பற்றியதாக இருந்தது.
நிந்தவூரில் அண்மைக் காலமாக போதைப் பாவனை வெகுவாக அதிகரித்திருப்பதாகவும், இந் நிலைமையானது குடும்பங்களிடையே பிளவுகளையும், உடல் நல சீர்கேடுகளையும், மாணவர்களிடையே இருண்ட எதிர்காலத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
நிந்தவூரில் சுமார் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் நிலையங்கள் இயங்கிவருவதாகவும் இதன்பொருட்டு வறுமைக் கோட்டின்கீழ் வாழும் சில பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு போதைப் பொருள் தரகர்களாக இயங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிகரெட் விநியோகம் பரந்த அளவில் எதுவித கூச்சமுமின்றி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதையும் கண்டறிந்துள்ளதாக தனது குத்பா உரையில் கூறினார்.
மதிப்புள்ள கிரமமாக தொண்டுதொட்டு பெயரெடுத்துள்ள நிந்தவூர் கிராமம் இந்த அவல நிலையிலிருந்து விடுபடவேண்டுமெனவும், அதற்காக நிந்தவூரிலுள்ள ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், ஏனைய பொது அமைப்புக்களும் கடுமையாக உழைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஜாமியா நழீமிய்யாவில் புடம்போடப்பட்ட நமது பிரதேச செயலாளர் மௌலவி முகம்மது அன்சார் அவர்களது இந்த அக்கரையை நிந்தவூர் மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். அன்னாருக்கு நமது வாழ்த்துக்களும் உரித்தாவதாக.
Post a Comment