ஹஸ்பர் ஏ ஹலீம்
கப்பல் துறை கிராம மக்களின் காணிகளை கபளீகரம் செய்யப்பட்டு காணிகள் பரிபோகின்ற நிலைமை காணப்படுகிறது இதனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என இன்று (09) கப்பல் துறை கிராமத்தில் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் மக்களிடம் புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வின் போது அமைச்சரிடத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கப்பல் துறை கிராமத்தின் 3/2 பங்குகளை துறை முகங்கள் அதிகார சபை கபளீகரம் செய்துள்ளது மக்களுடைய தனியார் காணிகளை கபளீகரம் செய்வதனையும் எல்லையிடுவதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
யுத்த காலத்தில் அரசினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது
துறை முகங்கள் அதிகார சபைக்கு.
இது தொடர்பாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திருகோணமலைக்கு வந்தபோது மக்களுடைய காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்
என கூறினேன்.
இது வரைக்கும் நடக்கவில்லை.
அமைச்சரிடத்தில் மேலும் வேண்டிக் கொள்வது என்னவென்றால் கப்பல் துறை, முத்து நகர் கிராம மக்கள் வீதியில் இறங்கிப் போராடி அரசாங்கத்தை அசுத்தப்படுத்தவில்லை .
மாறாக தங்களது உரிமைகளுடன் வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லீம் என இணைந்தே கொண்டு வந்தோம்.
இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடனும் கப்பல் துறை,முத்து நகர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் தொடர்பிலும் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்கிறேன்.
கப்பல் துறை பள்ளி வாயளினுள் துறை முகங்கள் அதிகார சபையினர் எல்லைகளை இட்டிருக்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும்.
இந்த வீட்டுத் திட்டத்தை மக்களுக்காக மூன்று கோடி 366 இலட்சம் ரூபா செலவில் செலவளித்து மக்களுக்காக செய்திருக்கிறீர்கள்.
இதே போன்று தொடர்ந்தும் ஒவ்வொரு சமூகத்துக்கும் இப் பகுதியில் உள்ள இன்னும் மீள் குடியேற்றப்படாமை இருக்கும் குடும்பங்களுக்கும் தனி த் தனியாக 100 வீடுகளை அமைக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் சஜீத் பிரேமதாச இங்கு உரையாற்றுகையில் இங்கு நாம் வந்திருப்பது மேலும் மக்களுடைய எதிர் காலத்தை பற்றி சிந்திப்பதற்கே டிசம்பர் மாதம் 31 க்கு முன்பு வருட முடிவில் இன்னும் 2500 வீடுகளை கட்டி முடிப்போம்.
2020 ஜனவரி 01 ம் திகதிக்கு முன் இரண்டாம் கட்டமாக 5000 வீடுகளுக்கான அடிக்கல்லை நடுவோம். முன்றாம் கட்டமாக 10000 வீடுகளுக்கான வீட்டுத் திட்டங்களை அடிக்கல் வைப்போம் என்றார்.
Post a Comment