நேற்று (25/09/2018) பிற்பகல் தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான M.S. உதுமாலெப்பை அவர்களும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்களும் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ALM அதாஉல்லாஹ் அவர்களை அவரது கிழக்கு வாசல் இல்லத்தில் சந்தித்தனர்.
தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடலில் கட்சியின் சிரேஸ்ட பிரதித்தலைவரும் ஆலோசகருமான Dr A.உதுமாலெப்பை அவர்களும் தேசிய அமைப்பாளர் Dr YSM.சியா அவர்களும் கலந்து கொண்டனர்.
கட்சிக்குள் இருந்து கொண்டு கருத்து வேறுபாடுகள், பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பாகவும் கட்சிக்கு வெளியில் இருந்து கட்சியை பிரிக்க முயற்சிக்கும் சக்திகள் தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது.
கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான உண்மையினை கண்டறியும் பொருட்டு விசாரனைக்குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் பிரதித்தலைவர் M.S. உதுமாலெப்பை அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மனத்தாக்கங்கள் தொடர்பில் தெளிவு காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 20.09.2018 அன்று தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக எழுதப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தலைமைத்துவமும், கட்சியும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இச்சந்தர்ப்பத்திலும் மீளப்பெறுமாறு தலைமைத்துவமும், சபையோர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க கட்சியின் நலனுக்காகவும், போராளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் தொடர்ந்தும் அப்பதவிகளில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு இணக்கம் காணப்பட்டது.
Dr Y.S.M. சியா.
தேசிய அமைப்பாளர்,
தேசிய காங்கிரஸ்.
Post a Comment