Top News

மாகாண சபை தேர்தலுக்கு தயாராகுங்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறிவிப்பு


மாகாண சபை தேர்­தலே அடுத்­த­தாக நடத்­தப்­ப­ட­வுள்­ளது. ஆகவே அதற்கு நாம் முகம்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அதற்கு துரி­த­மாக நாம் தயா­ராக வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
அத்­துடன் உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் தோல்­வியை நாம் ஏற்றுக் கொள்­கின்றோம். தற்­போது மக்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக நாம் மாற்றம் கண்டு வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கண்டி மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்டம் நேற்று கண்டி சிங்­கள வர்த்­தக சங்க சம்பத் கட்­ட­டத்தில் நடை­பெற்­றது. இங்கு கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
கண்டி,  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பல­மான கோட்­டை­யாகும். அந்த நிலை­மையை நாம்  பாது­காக்க வேண்டும். மாகாண சபை தேர்­தலே அடுத்­த­தாக நடத்­தப்­ப­ட­வுள்­ளது. ஆகவே அதற்கு நாம் முகம்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அதற்குத் தயா­ராக வேண்டும். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தோம். மக்­க­ளினால் தக்க பதி­லடி கிடைத்­தது. அதற்கு நாம் முகம்­கொ­டுத்தோம்.
ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி முடிந்­தது என்று ஊடகம் உட்­பட அனை­வரும் கூறினர். எனினும் அது நடக்­க­வில்லை. அதி­லி­ருந்து நாம் எழுந்து வந்தோம்.
தற்­போது ஐக்­கிய தேசியக் கட்சி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பிக் கொடுத்­துள்­ளது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி 2003 ஆம் ஆண்டை போன்று எதி­ர­ணிக்கு நாட்டை ஒப்­ப­டைக்­கவா என சிலர் எண்­ணு­கின்­றனர். அப்­படி நாம் இம்­மு­றையும் இட­ம­ளிக்க மாட்டோம்.
2001 ஆம் ஆண்டு பொரு­ளா­தாரம் சீர்­கு­லைந்­தி­ருந்­தது. நாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் விடு­தலைப் புலி­க­ளுடன் சமா­தான உடன்­ப­டிக்கை செய்தோம். இதன்­போது நாட்டின் பிர­தான தளங்­க­ளான துறை­முகம், விமான நிலையம் என்­ப­வற்றைத் திறந்­ததால்  பொரு­ளா­தாரம் பெரும் முன்­னேற்றம் கண்­டது. 4000 மில்­லியன் டொலர் நிதி­யு­தவி வெளி­நா­டு­களில் இருந்து கிடைத்­தது.
விடு­தலை புலி­க­ளு­ட­னான சமா­தான உடன்­ப­டிக்­கையை அப்­போது தெற்கில் பலரும் எதிர்த்­தனர். நாட்டை காட்­டிக்­கொ­டுத்­த­தாகக் கூறினர். என்­றாலும் சமா­தான உடன்­ப­டிக்கை என்­பது வெறும் காற்று என்றே பிர­பா­கரன் சொன்னார். இந்த உடன்­ப­டிக்­கை­யினால் கிழக்கு மாகா­ணத்தை பறி­கொ­டுக்க நேரிட்­ட­தாகப் புலிகள் தரப்பு கூறி­யது. எவ்­வா­றா­யினும் நாம் அந்தப் பிரச்­சி­னையை தீர்த்துக் கொண்­டி­ருக்­கையில் மக்கள் எம்மை நிரா­க­ரித்­து­விட்­டனர். நாம் கட்­டி­யெ­ழுப்­பி­யதில் கூட முன்­னைய ஆட்­சி­யினர் சரி­யாக பிர­யோ­சனம் அடைந்­து­கொள்­ள­வில்லை.
எனினும் 2001 ஆம் ஆண்­டை­விட மிக­வும மோச­மான பொரு­ளா­தா­ரத்­தையே நாம் 2015 இல் பொறுப்­பேற்றோம். விமான நிலையம், துறை­முகம் சீராக இயங்­கியும் நாடு பொரு­ளா­தார ரீதி­யாக பெரும் பின்­ன­டவை சந்­தித்­தது. எல்­லை­மீ­றிய கடன் சுமையின் தவ­ணையை செலுத்­து­வ­தற்கு கூட நாட்டின் வரு­மானம் போது­மா­ன­தாக இருக்­க­வில்லை. தமக்­கான பத­விக்­காலம் மேல­தி­க­மாக இரண்டு வரு­டங்கள் இருக்­கும்­போது நான்­கா­வது வரு­டத்தில் அந்த பத­வியை விட்டு செல்­வது பைத்­தி­ய­கார செய­லாகும்.
காலம் இருந்தும் ஆட்­சியை விட்டுத் தப்­பித்­து­விட்­டனர். ஆனால் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு பைத்­தி­ய­மில்லை. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அவ­ரினால் கொண்டு செல்ல முடி­ய­வில்லை. அத­னால்தான் மஹிந்த ராஜபக் ஷ உட­ன­டி­யாகத் தேர்­தலை நடத்­தினார்.
இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தற்­போது தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். நெருக்­க­டி­யான நிலை­மை­யி­லேயே நாம் ஆட்­சியை பெறு­பேற்றோம்.
உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் தோல்­வியை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். நாம் தற்­போது மாற்றம் கண்­டு­வ­ரு­கின்றோம். பூ­ர­ண­மாக மாற­வில்லை. தற்­போது புதிய வேலைத்­திட்­டங்கள் வரு­கின்­றன. கம்­பெ­ர­லிய திட்­டத்தை விரைவில் ஆரம்­பிக்க முடியும். அதற்­கான நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு தற்­போது அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளன. வெகு­வி­ரைவில் நிதிகள் வந்து சேரும். சமுர்த்தி பய­னா­ளி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்போம். நாம் கிராம மட்­டத்தை  பலப்­ப­டுத்த வேண்டும்.கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்பும் போது நாட்­டையும் பார்க்க வேண்டும்.
நாம் முன்­னேறி செல்­லும்­போது திட்டு வாங்க வேண்டி ஏற்­படும். திட்டு வாங்­காமல் எதுவும் செய்ய முடி­யாது. இந்த சந்­தர்ப்­பத்தில் கூட்டு எதி­ர­ணியின் வேலைத்­திட்டம் என்ன? மொட்டு சின்­னத்­த­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி மன்றத்தை ஒப்படைத்தோம். தற்போது நன்றாக அனைத்து காரியங்களையும் செய்து வருகின்றனர். கிராமத்தை மிக்க சிறப்பாக சீர் செய்து வருவதனை நாம் தினந்தோறும் கண்டு வருகின்றோம். எவ்வாறாயினும் நாம் எமது வேலைகளை பார்ப்போம். அவர்கள் அவர்களது வேலைகளை பார்க்கட்டும். உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு சிலர் கம்பெரலிய திட்டத்தை செயற்படுத்த விடுவதில்லை. அது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
தொகுதிகளிலுள்ள செயற்றிறனற்ற அமைப்பாளர்களை உடன் நீக்கவுள்ளோம். மாகாண சபை தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். கிராமத்திற்கு சென்று கட்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

-Vidivelli

Post a Comment

Previous Post Next Post