(மக்கள் மனு, சிலோன் முஸ்லிம்)
மன்னார், முசலி பிரதேசசபையின் வருமானத்திற்காக மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.சுபிஹான் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தமிழ் ஊடகம் ஒன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
முசலி பிரதேசசபைக்கென வருமானங்கள் இல்லை. எனவே எரிபொருள் செலவு மற்றும் வாகன திருத்த வேலைகள் என்பவற்றுக்காக குடிநீருக்காக பணம் அறவிடப்படுகின்றது. பிரதேசசபையின் வருமானத்திற்காக மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது.
பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களை தேசிய நீர் வழங்கல் சபையிடம் அடையாளம் காட்டினால் அவர்கள் மக்களுக்கு இலவசமாகவே நீர் விநியோகம் செய்து கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்,
முசலி பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீருக்கு, முசலி பிரதேச சபை பணம் அறவிடுகின்றனர். 1000 லீட்டர் தாங்கியில் நீர் நிரப்புவதற்கு 300 ரூபாவும், 500 லீட்டருக்கு 150 ரூபாவும், 200 லீட்டருக்கு 80 ரூபாவும், வாளி குடங்களுக்கு 30 ரூபாவிற்கு மேலும் அறவிடப்படுகிறது.
வீட்டில் 5 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு 1000 லீட்டர் எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்? பெருந்தொகையான பணம் செலவழித்து குடிநீர் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு எம்மிடம் வருமானம் இல்லை. மக்கள் சேவைக்காக வந்த பிரதேசசபை குடிநீருக்காக பணம் அறவிடு செய்யும் இந்த செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
Post a Comment