அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வேட்பாளராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாத்திரமே களமிறங்குவார் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடுத்து வரும் ஜனாதிபதி வேட்பாளர் வேறு யாரும் இல்லை மைத்ரிபால சிறிசேன என்பதை எவ்வித அச்சமும் இன்றி தெளிவாக கூறுகின்றோம். 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேர்தலை பிரகடனப்படுத்தி, 2020 ஆம்ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வது வேறு யாரும் இல்லை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்ரிபால சிறிசேன என்பதை ஆணித்தரமாக கூறுகின்றோம். இவை வெற்று பேச்சுகள் அல்ல. இதற்கான முறைகள் காணப்படுகின்றன. அவற்றை இப்போது கூற விரும்பவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சகல மக்களையும் இணைத்துக் கொண்டு இனமத வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாடு ஒன்றை உருவாக்கும் கட்சியாக செயல்பட கூடிய வகையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை முன்னெடுத்துச் செல்கின்றார் என குறிப்பிட்டார்.
மத்திய கொழும்பு ஜிந்துபிட்டி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment