இலங்கையில் பெண்கள் கடனை மீள திருப்பிச்செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளாகின்றனர் என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
கடன்களை மீளப்பெறும் ஈடுபட்டுள்ள நபர்களால் பெண்கள் உளஉடல்ரீதியான வன்முறைகளை சந்திக்கநேர்கின்றது எனவும் ஐநா நிபுணர் தெரிவித்துள்ளார்.
கடன்பெற்றவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்பதற்கு முயன்ற சம்பவங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர், வேறு சிலர் ஒப்பந்தத்தை மீறியதற்காக வன்முறைகளை சந்தித்துள்ளனர் அல்லது பெற்ற கடனை மீள திருப்பி செலுத்துவதற்காக பல மணிநேரம் வேலை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடன்பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் இந்த நுண்கடன் பிரச்சினையே காரணமாகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.
இதேவேளை நுண்கடன்கள் அதனை பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுமுள்ளன எனவும் ஐநா நிபுணர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் நுண்கடன்களை வழங்கியவர்களின் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகத்தின் தீவிர தன்மையை கருத்தில்கொள்ளும்போது அரசாங்கம் இதில் தலையிடவேண்டியது அவசியம் எனவும் ஐநா நிபுணர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலவும் பகுதிகளை நுண்கடன் நிறுவனங்கள் இலக்குவைப்பதை நான் அறிந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment